65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை

d7
d7

சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாய்க்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தெங்கு தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.

சந்தைகளில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 45 ரூபாய்க்கு 80 ரூபாய்க்கும் இடையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.