சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / துரோகி என்ற பெயரில் நான் விழிக்கப்படுவது எனக்கு கவலை இல்லை – கருணா அம்மான்

துரோகி என்ற பெயரில் நான் விழிக்கப்படுவது எனக்கு கவலை இல்லை – கருணா அம்மான்

கருணா அம்மான் துரோகி என்று சொல்வதுபற்றி நான் கவலைப்படவில்லை .

எனக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் மட்டுமே நமக்குள் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் தெரியும் நான் சிறிய கருத்து முரண்பாடு காரணமாகவே வெளியே வந்தேன் .

நான் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டவன் அல்ல .நான் போராட்டத்தை காட்டி கொடுத்தவன் அல்ல.

தலைவர் இறந்த பின்னர்தான் அவரின் உடலை அடையாளம் காண மட்டுமே நான் அந்த பிரதேசத்துக்கு சென்றேன் .

தலைவர் என்னை ஒருபோதும் துரோகி என கூறவில்லை ,இப்போது ஒருசிலர் தமது அரசியல் இலாபத்துக்காக என்னை துரோகி என கூறுகின்றனர் .

தலைவர் என்னை ஒருபோதும் தாழ்த்தி கூறவில்லை ,நானும் அவரை தாழ்த்தி கூறமாட்டேன் .

தமிழர்களுக்கு ஒரு தலைவன் என்றால் அது பிரபாகரன் மட்டுமே .

அவரைப்போல் இனி ஒருவர் உருவாக்கவும் மாட்டார்கள் ,உருவாக்கவும் முடியாது .

எமது வளங்களை சுரண்டும் அரசு ,எமது மக்களை ஒடுக்கும் அரசிடம் இருந்து எமது மக்களைக்காப்பதற்காகவே நான் இப்போது முயற்சித்து வருகிறேன் என எமது தமிழ்க்குரல் ஊடகத்தின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் கருணா அம்மான் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழில் ஊரடங்கு நேரத்தில் 6 பேருந்துகளில் டீசல் திருட்டு

யாழ்ப்பாணம், கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் ...