தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்கப்போகும் பெண் வேட்பாளர்

72 n
72 n

இலங்கை அரசியலில் அடுத்த பெரும் பரபரப்பு நாடாளுமன்ற தேர்தல். இதில் கட்சிகள் தம் சார்பு வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண் வேட்பாளர்களையே தெரிவு செய்வதில் எந்த கட்சிக்கும் பெரும் பிரயத்தனம் இருக்கவில்லை ஆனால் ஆளுமையான பெண் வேட்பாளர்களை தெரிவுசெய்வதில் ஒவ்வொரு கட்சியும் பெரும் பகீரத பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது .

அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் உறுப்புரிமை பெற்று கட்சியில் மகளீர் அணி தலைவியாக செயற்படும் திருமதி மதினி நெல்சன் அவர்களை இம்மமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் யாழ்மாவட்டத்தில் களமிறக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன .

மதினி நெல்சன் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பதோடு இம்முறை அவரை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கும் நோக்கோடு கட்சியின் ஊடக பேச்சாளர் எம் .ஏ .சுமந்திரன் அவர்களின் விடாப்பிடியான சிபாரிசின் அடிப்படையில் பல எதிர்ப்புக்கள் மத்தியில் மகளீர் அணி தலைவியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் .

42 வயதுடைய மதினியை தற்போது யாழ்மாவட்டத்தில் களமிறக்க கட்சி தீமானித்துள்ளதாக கூறப்படுகிறது .