அதிபர் நியமனத்தில் குளறுபடி – தெரிந்தவர்களுக்கு அயல் பாடசாலை!

1 iu
1 iu

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 10ம் திகதி நியமனம் வழங்கப்பட்ட 60 அதிபர்களில் 30 பேர் மட்டுமே நேற்றுவரை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களிற்காக இடம்பெற்ற பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 60 பேரிற்கு அதிபரிற்கான நியமனம் வழங்கப்பட்ட நிலைநில் அதிகமானோரிற்கு வன்னிப் பாடசாலைகளிற்கே நியமனம் கிடைத்தது.

இவ்வாறு வன்னிப் பகுதிக்கு நியமனம் வழங்கப்பட்ட அதிபர்களில் பலர் மேன்முறையீட்டுடன் இதுவரை கடமைகளை பொறுப்பேற்கவில்லை . இதேநேரம் நியமனம் வழங்கப்பட்ட தினத்தில் இருந்து 14 தினங்கள் வரையில் பணியினைப் பொறுப்பேற்க முடியும் என்றபோதும் ஏன் பணியினைப் பொறுப்பேற்கவில்லை என நியமனம் கிடைத்த அதிபர்களிடம் வினாவியபோது – தெரிந்தவர்களிற்கு யாழிலும் அண்மையிலும் நியமனம் வழங்கியபோதும் சிலரிற்கு நீண்ட தூரத்தில் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்

கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூறுகையில் எவரது உறவிற்கும் முன்னுரிமை வழங்கவில்லை. ஆனால் குடும்பநிலமை அல்லது உடல்நிலை கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கும். இதேநேரம் சிலர் பாதிக்கப்படுவதாக முறையிட்டால் அது தொடர்பில் ஆராயப்படும்என கூறப்பட்டுள்ளது .