சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் -ஜனாதிபதி

இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் -ஜனாதிபதி

உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகள் மூலம் துர்க்குணங்கள் இருந்து விலகி உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

பல்வேறு சிக்கல்கள் முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கி செல்லும் இன்றைய உலகில் மனிதனுக்கு உலக அமைதி தருவது சமயமாகும்.

நமது சகோதர தமிழ் சமூகத்தினர் உட்பட அனைத்து இலங்கையர்களும் புத்துணர்ச்சியுடன் புதியதோர் எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இச்சூழ்நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமய நல்லிணக்கத்தையும் நாட்டின் அனைத்து இனங்களும் தமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதே நாட்டின் தலைவர் என்ற வகையில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.புனித மகாசிவராத்திரி தினத்தில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி அனைவரினதும் ஆன்மீகத்தை ஒளி பெறச் செய்யட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பூட்டபடவுள்ள பொருளாதார மத்திய நிலையம்!

தற்போதய சூழ்நிலை காரணமாக கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தினை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு மத்திய ...