சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பொதுமன்னிப்பு

இலங்கையில் போரின் போது நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கொழும்பு மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்பு வழங்க முடியுமா என்பதை ஆராய மரணதண்டனை விதித்த மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஜனாதிபதி அறிக்கைகளை பெறவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தொலைபேசி நிறுவனங்கள் வழங்கவுள்ள சலுகை!

இலங்கை மக்களுக்கு இணைய வசதிகளை முடிவுமானளவு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ...