ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவில்ல – சபாநாயகர் தெரிவிப்பு

karu jayasuriya 2
karu jayasuriya 2

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை தான் மாற்றியுள்ளதாக பௌத்த துறவிகளுடன் நேற்று நடாத்திய விசேட சந்திப்பின் போது சபாநாயகர் கருஜயசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று பிரதமர் மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தான் எதிர்பார்க்கவில்லை ரணில் விக்ரமசிங்க அல்லது சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரில் ஒருவரே வேட்பாளராக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மிக விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிக்கலுக்கு முடிவு வரும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கருஜெயசூரிய உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்பொழுது கருஜெயசூரிய அதிலிருந்து விலகியுள்ள போதிலும் முழுமையாக யார் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது புரியாத புதிராகவே காணப்படுகிறது. இதற்கான பதில் இன்னும் ஒருசில நாட்களில் வெளிச்சத்திற்கு வந்தாக வேண்டிய நிலையில் காணப்படுகிறது.