சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த – போராட்டம்

மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த – போராட்டம்

மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம், மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தின்போது, சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் நீதியான விசாரணை நடாத்தக் கோரியும் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும் அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில், இன்று(சனிக்கிழமை) கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய ...