ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கை ஆரம்பம்

voter list
voter list

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் தற்சமயம் அச்சிடப்பட்டு வருவதாகவும்
2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமையவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாவட்ட பிரதேச செயலக மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த வாக்காளர் இடாப்பு தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமது பெயர் குறிப்பிட்ட இடாப்பில் உள்ளதா? என்பது குறித்தும் ஆராய்ந்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த ஆவணங்கள் அச்சிடும் பணிகளை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னெடுத்து வருகிறது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இவற்றை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தபால் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பொறுப்பாளர் திருமதி. கங்கானி லியனகே தெரிவித்தார்.