கடும் வறட்சி – 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

1 dfr 1
1 dfr 1

நிலவும் வறட்சியான காலநிலைக் காரணமாக 4 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 28,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் வசிப்பவர்களே வறட்சி காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் சுமார் 2 இலட்சத்து 15,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குடிநீரில் கடல்நீர் கலந்ததன் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, பானந்துறை, களுத்துறை மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 2 இலட்சத்து 12,728 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கொஹூபிடிய, தெரணியகலை, கலிகமுவ மற்றும் வரகாபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 3697 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டதிலும் 7,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென்றும் கண்டி மாவட்டத்தில் 1,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென்றும் குறித்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.