சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்த கடற்படை விமானப்படையினர்

வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்த கடற்படை விமானப்படையினர்

கொழும்பு வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர், பொலிஸாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் உதவியினைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மிகவும் நெரிசலான நுழைவு, வெளியேறும் இடங்களில் இராணுவ பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினது வழிக்காட்டலின் கீழ் கொழும்பு நகரத்தினுள் வாகன நெருக்கடிகளை குறைப்பதற்காக இலங்கை பொலிஸாருக்கு உதவும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இராணுவப் பொலிஸாருக்கும் மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமானப்படையினரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம்

அரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை முதல் எதிர்வரும் 10 ...