சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப் பதற்கான வேலைத் திட்டம்!

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப் பதற்கான வேலைத் திட்டம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

மாவட்டங்கள் தோறும் இன்று  முதல் எதிர்வரும் நான்கு தினங்களுக்கு நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர், தேசிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப் பாத்திரம், வதிவிடச்சான்றிதழ், குடும்ப பங்கீட்டு அட்டை, பாடசாலை விடுகைப்பத்திரம், கல்வித் தகமை சான்றிதழ்கள், பிரதேச,  மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள், ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான வவுனியா மாவட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக்கே இவ்வாறு நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், கடிதங்கள் கிராம சேவகர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம்

அரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை முதல் எதிர்வரும் 10 ...