இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத, செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது

90 7
90 7

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பாடகரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவருமான மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.


அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டிற்குள் தீவிரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து நான் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளேன்.


தற்போது இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள சிலர் தீவிரவாத பிரசாரங்கள் பலவற்றை நடத்துகின்றனர்.

நாட்டிற்குள் அவ்வாறான பல தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்னும் இருப்பதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


மீண்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்றதொரு தாக்குதல் இந்த நாட்டில் நடைபெறாமல் இருப்பதற்கும் மீண்டும் இந்த நாட்டிற்குள் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப் பின்னர் கடந்த வருடம் மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்புலத்தில் மதுமாதவ செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.