சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையமாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையமாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மத்திய குழு ஆகியவை ஐ.தே.க.வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமையே சுதந்திரக் கட்சியின் அழிவுக்கு வழிவகுத்தது என்றும் இதுவே நாங்கள் செய்த ஒரு வரலாற்று தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவரை சஜித் பிரேமதாச தலைமையிலான தனது புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு கடந்த சில திங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கட்சியின் சில உறுப்பினர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு தங்கள் இணங்கவில்லை என்றாலும், ஒருபோதும் சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்காது என்று ஜயசேகர கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வெடிப்பு சம்பவத்தில் சிறுமி காயம்!

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட கினிகம பகுதியில் சிறுமியொருவரின் கையிலிருந்த பொருளொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக காயமடைந்துள்ளார். ...