கோட்டா ஆணையிடும் நாளில் சஜித்தின் ஆட்டமும் ஆரம்பம்

1 dfw
1 dfw

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் புதிய அரசியல் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு மார்ச் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரநிதிகள் உட்பட மேலும் பல பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பிலுள்ள தாமரை தடாகம் கலையரங்கும் நடைபெறும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைக்கும் அரசிதழை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மார்ச் 2 ஆம் திகதியே வெளியிடுவார் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர். அந்தநாளிலேயே சஜித் தலைமையிலான புதிய கூட்டணியும் மலர்கின்றது.

” புதிய கூட்டணியை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு மார்ச் 2 ஆம் திகதி நடைபெறும். இதில் பங்கேற்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். புதிய கூட்டணி ஊடாக புதிய அரசியல் பயணம் தொடரும்.

நாட்டு மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் செயற்படுவோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.