கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் ஆரம்ப நிகழ்வு!

IMG 8246
IMG 8246

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் தமிழ் இலக்கிய விழாவின் இவ்வருடத்துக்கான நிகழ்வுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் ஆரம்பமாகின.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழா பண்பாட்டு பவனியுடன் ஆரம்பமானது.

பணபாட்டு பவனியில் கிழக்கு மாகாணத்தின் கலை கலாசார பண்பாட்டு விடயங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு புனித செபஸ்ரியார் ஆலய முனறல் மற்றும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம் ஆகிய இடங்களிலிருந்து விழா நடைபெற்று தேவநாயகம் மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது.

அதனையடுத்து எம்.எஸ்.எஸ்.ஹமீத் அரங்கில் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் தமிழ் தாய்க்கு மாலை அணிவித்து தமிழ்தாய் வாழ்த்துடன் தமிழ் இலக்கிய விழா- 2019 நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா- 2019ல் ‘பிரதிகளின் உயிர்ப்பு – பேசாப் படைப்பைப் பேசுதல்’ என்ற தலைபபில் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில், ஆய்வரங்கு நடைபெறுகின்றது.

இவ் ஆய்வரங்கில் , கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஜ்ட உதவிச் செயலாளர் வெ.தவராஜா, கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, த.மேகராசா மு.மயூரன், ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்குதல், கலை நிகழ்வுகள், கௌரவிப்புகள், வித்தகர் விருது வழங்கல், இளம் கலைஞர் விருது வழங்கல், விழா மலர் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.