ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகும் 3 ஐ.தே.க அமைச்சர்கள்

pc
pc

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (23.09.2019) அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையாக உள்ளனர்.

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் போது அமைச்சரின் புகைப்படத்தை அதில் உள்ளடக்கியதின் ஊடாக இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே , கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு ஆஜராகவுள்ளார்.

வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில், இடம்பெற்ற சம்பவம் தொடர்பான முறைப்பாட்டுக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆஜராகவுள்ளார்.