இன்றைய நாள் ராசி பலன்கள்

2 7
2 7

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சமங்களை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: பாலிய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக இருக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி இருக்கும். சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.