லாராவை கவர்ந்த லோகேஷ் ராகுல்

2d
2d

முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மனம் கவர்ந்த வீரராக லோகேஷ் ராகுல் உள்ளார்.

விண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா 50. டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்த ஒரே வீரர்.

தற்போதைய கிரிக்கெட் அரங்கில் மனம் கவர்ந்த வீரர் குறித்து லாரா கூறுகையில்,‘‘ இந்தியாவின் லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடுகிறார்.

இவரது பேட்டிங்கை ரசித்து பார்க்கிறேன். தனது பேட்டிங் திறமையால், கண்களுக்கு விருந்தளிக்கிறார். டெஸ்ட் போட்டியை ஐந்து நாட்களாக தொடர்ந்தாலும், நான்கு நாட்களாக குறைத்தாலும் எவ்வித பிரச்னையும் இல்லை. எத்தனை நாட்கள் நடத்தினாலும், எப்படியாவது போட்டியில் முடிவு கிடைக்க வேண்டும். முதல் நாள் ஆட்டத்தில் உண்டாகும், விறுவிறுப்பு கடைசி நாள் வரை தொடருவது அவசியம். இதுதான் எனது விருப்பமாக உள்ளது,’’ என்றார்.