அயர்லாந்து ஆறுதல் வெற்றி

4d
4d

ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில், அயர்லாந்து அணி சூப்பர் ஓவரில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.

கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் குவித்தது . அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் முடிந்தது.

குர்பாஸ் 42, கேப்டன் அஸ்கர் 32, ரஷித் கான் 14 ஓட்டங்கள் எடுத்தனர்.இதைத் தொடர்ந்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 8 ஓட்டங்கள் எடுக்க, அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது.

ரஷித் வீசிய பந்தை கெவின் ஓ பிரையன் சிக்சராக அடித்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தினார்.மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கெவின் ஆட்ட நாயகன் விருதும், குர்பாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.