தமிழ் மக்கள் தேசிய கூட்டணியுடன் இணைந்த கிழக்கின் முக்கிய கட்சி!

viki kanesamoorthy
viki kanesamoorthy

தமிழ்த் தேசியக் கொள்கையுடைய கூட்டு முன்னணிகளில் ஒரே ஒரு பதிவு செய்யப்பட்ட கூட்டான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று புதிதாக இணைந்துள்ளது.

கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணியே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் இணைந்த புதிய கட்சியாகும். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கிழக்கு விஜயத்தின்போது தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இந்தக் கூட்டணி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் ‘கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி எங்கள் கூட்டணியில் இல்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த ஆதங்கத்தை தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது’ என்றார்