ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணம்

i3 4 4
i3 4 4

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தான் எந்த மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன்; 50 வயதுக்கு உட்பட்டோருக்கு ஆட்சி பதவி; டெண்டர் கமிஷன் போன்றவற்றுக்கு இடமளிக்க மாட்டேன்; ஆட்சி செயல்பாட்டை தனிக் குழு கண்காணிக்கும்; இதுதான் என் அரசியல் என மாவட்ட செயலர் கூட்டத்தில் நடிகர் ரஜினி தன் கொள்கையை வெளிப்படையாக அறிவித்தார்.

மேலும் மக்கள் மத்தியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் ஆட்சிக்கு வருகிறேன். இதற்கு சம்மதம் என்றால் கட்சி துவக்குவதாக அவர் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் டுவிட்டரில், முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது; அது எனக்கு, செட் ஆகாது என, ரஜினி கூறியிருக்கிறார். அவர் கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி, அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை. கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்த ராஜதந்திரமும் தேவை. எனவே, ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது; இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும். கட்சி, ஆட்சி இருவர் கையில் இருந்தால், முதலில் கட்சி, சின்னம் முடங்கும்; இதுவே வரலாறு. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.