கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்

8 vv
8 vv

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தையும் அது விட்டு வைக்கவில்லை.ஐநா தலைமையகத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான பெண் தூதர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.

ஐநா தலைமையகத்தில் வைரஸ் தொற்று பாதிக்கும் முதல் நபர் இவராவார். இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் 14 நாள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.