மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா தகுதி

pf
pf

லண்டனில் நடந்து வரும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3 செட்களில் கடுமையாக போராடி, இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை வீழ்த்தியதன் மூலம், காலிறுதிக்கு நொசோமி முன்னேறினார்.

நேற்று இரவு நடந்த காலிறுதி போட்டியில், மகளிர் ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சீன வீராங்கனை சென் யூ பெய்யுடன், நொசோமி மோதினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் சீன வீராங்கனை சென் யூ, எதிர்பார்த்த அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை.

இதனால் முதல் செட்டை 21-14 என எளிதாக நொசோமி கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் 2வது செட்டை நொசோமி எதிர்கொண்டார். 2வது செட்டில் சென் யூ, சற்று எழுச்சியுடன் ஆடினார்.

தனது சர்வீஸ்களை தக்க வைத்துக் கொண்டே முன்னேறினார். நொசோமியும் தனது சர்வீஸ்களை விட்டுக் கொடுக்கவில்லை இதனால் இருவரும் சம அளவு புள்ளிகளுடன் முன்னேறினர்.

தேவையான நேரத்தில் நொசோமி அதிரடியாக ஆட, 2வது செட் நூலிழையில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் அவர் வசமானது. இதையடுத்து 21-14, 23-21 என நேர் செட்களில் சென் யூவை வீழ்த்திய நொசோமி, இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி விட்டார்.