யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு வணிகர் கழகம் விடுத்துள்ள அறிவித்தல்!

1 oad
1 oad

அனைத்து வர்த்தகர்கள் மருந்தக உரிமையாளர்கள் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விநியோகஸ்தர்களுக்கான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..

  1. பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மருந்து வகைகள் அரிசி வகைகள் மற்றும் ஏனைய பொருட்களை போதிய கையிருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  2. பொதுமக்களுக்கான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் தட்டுப்பாடின்றி விநியோகிக்க தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  3. கடந்த சில நாட்களாக தாங்கள் இரவு பகல் பாராது மக்களுக்கு பொருட்கள் விநியோகித்தமையையிட்டு நாங்கள் உங்களை பாராட்டுவதுடன், தொடர்ந்தும் இக்கட்டான நிலைகள் ஏற்படும் போது மக்களுக்கான சேவையை தொடர்ச்சியாக வழங்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
  4. வடமாகாணத்திற்கான அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் விநியோகத்தில் தனியார் துறையினரே பெரும்பங்கை வகித்து வருகிறார்கள். அந்த வகையில் வடமாகாணத்தில் இருக்கும் மக் களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் பாரிய பொறுப்பு எம்மிடமே உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து அவர்களுக்கான சேவையை திருப்திகரமான முறையில் நிறைவேற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
  5. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களிடம் இருக்கும் கையிருப்புக்களை எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றோம்.
  6. வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு தங்காலிக களஞ்சிய வசதி தேவைப்படின் யாழ் வணிகர் கழகத்துடன் தொடர்பு கொண்டால் அரசாங்க அதிபர் மூலமாக அரச களஞ்சியங்களை பெற்றுத்தர ஆவன செய்யப்படும்.

மேலே குறிப்பிட்ட பாரிய பொறுப்புக்களை சுமந்து நிற்கும் நாங்கள் வர்த்தக நிலையங்களிலும் தங்கள் வீடுகளிலும் சுகாதாரத்தினைப் பேணுவதுடன் கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக தண்ணீல்
சவர்க்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவுதல் இருமல் அல்லது தும்மல்; ஏற்படும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடுதல் உடல் நிலை சரியில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்தல் மக்கள் கூடுதலாக ஒன்றுகூடும் இடங்களைத தவிர்ததல் கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் கண்கள் மூக்கு வாய் அல்லது முகத்தை தொடாதிருதிதல் ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்தவரை ஒரு மீற்றர் தொலைவில் இருந்து உரையாடுதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சி நோய் எதிரப்ப்பு மருந்துகள் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றுதல் ஏதாவது நோய் அறிகுறி இருப்பின் வைத்தியசாலையை உடன் நாடுதல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் .