சற்று முன்
Home / விளையாட்டு / பாக்கிஸ்தான் வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்

பாக்கிஸ்தான் வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணியின் முன்னாள் வீரர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதுபோன்று செய்வதில்லை.

இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உயரமான இடத்திற்கு வந்துள்ளார்.

ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தலைமை வகிக்கிறார்.

கிரீம் ஸ்மித் தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு தலைமை வகிக்கிறார்.

மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் எதிர்மாறாக பாகிஸ்தானில் நடக்கிறது.

என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயன்படுத்துவதில்லை.

என்னுடைய வேலை டிவி நிகழ்ச்சிகளில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதில்லை.

அவர்கள் என்னை கிரிக்கெட் ஆலோசனை சொல்ல அனுமதிக்க வேண்டும்.

பாகிஸ்தான் அரசு கிரிக்கெட் வாரியத்தை மேம்படுத்துவதை நிறுத்திவிட்டது.

சரியான நபர்களை கொண்டு முடிவெடுத்தால் மட்டுமே நாட்டின் கிரிக்கெட் வாரியம் வளர்ச்சியை காணும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொரோனாவால் பாதிப்பு அறிகுறி ‘தனிமை’ வீரர் விடுவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சொந்த ...