அது என் கணக்கு இல்லை வடிவேலு காட்டம்

i3 16
i3 16

சினிமா பிரபலங்கள் பலரும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் ஒரு கணக்கு ஆரம்பித்து தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னிணி நகைச்சுவை நடிகரான வடிவேலு 2013ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார். ‘தெனாலிராமன், எலி’ படங்கள் வெளிவரும் வரை டுவிட்டரில் இருந்தார். அதன்பின் எந்த ஒரு பதிவையும் போடவில்லை.

ஆனால், நேற்று திடீரென ஒரு பழைய வீடியோவைப் போட்டு புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த முதல் பதிவில், பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு. #PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன், என்று இந்த புதிய கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

முதல் பதிவிலேயே ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, எப்போதோ பரபரப்பான ‘#PrayForNesamani” ஆகியவை இதில் இருப்பதுதான் இது அவரின் கணக்காக இருக்குமோ என சந்தேகத்திற்குக் காரணமாக இருந்தது.

இதுப்பற்றி வடிவேலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, ‘தெனாலிராமன்’ படத்தின் போது இயக்குனர் யுவராஜ் ஒரு கணக்கை துவக்கினார். அதை நான் இப்போது பயன்படுத்துவது இல்லை. அவரிடம் சொல்லி அதையும் நீக்க இருக்கிறேன். இதுதவிர நான் வேறு எந்த பெயரிலும் டுவிட்டரில் இல்லை. என் பெயரை போட்டு அதை ஆரம்பித்தது யாருனு முதலில் கண்டுபிடிங்க” என தெரிவித்துள்ளார்.