சற்று முன்
Home / சினிக்குரல் / 2021ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியீடு

2021ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியீடு

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஒவ்வொரு கட்டம் ஆரம்பமாகும் போதும் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் மீறி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

2021ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி தான் படம் வெளியாகப் போகிறது. இருப்பினும் தற்போது கொரானோ அச்சத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய் உள்ளது. எனவே, மீண்டும் பட வெளியீட்டுத் திகதியை மாற்றுவார்கள் என்றும் சொல்லி வருகிறார்கள்.

இதனிடையே, படத்தின் நாயகியான ஆலியா பட், இப்படத்திலிருந்து விலகப் போகிறார் என கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘கங்குபாய் கதியவாடி’ என்ற ஹிந்திப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆலியா. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தேதியும், ஆர்ஆர்ஆர் படப்பிடிப்புத் தேதியும் மோதிக் கொள்கிறதாம். அதனால், ஆலியா ‘கங்குபாய்’ படத்திற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். எனவேதான், அவர் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை விட்டு விலகப் போகிறார் என்றார்கள். ஆனாலும், ஆர்ஆர்ஆர் குழுவினர், ஆலியா படத்தில் நடிப்பது உறுதி என்று சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

தனிமைப்படுத்தப்பட்ட நடிகை- ஷராதா ஸ்ரீநாத்

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு ...