இயக்குநரும் நடிகருமான விசு காலமானார்

visu
visu

இயக்குநரும் நடிகருமான விசு இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

நடிகர் விசு 1945ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். அவரது முழுப் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் ஆகும்.

சுருக்கமாக விசு என அழைக்கப்பட்டு வந்தார். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் விசு.

இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் விசு. அப்போதே சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு படம்தான். அந்த படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குனாராக அறிமுகமாகினார். மேலும் மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 75 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் உள்ளனர் . வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார் விசு.

கடந்த சில நாட்களாக சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நடிகர் விசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு செய்தியைக் கேட்டு திரைத்துறையினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாராம், மணல் கயிறு, வெகுமதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய விசுவின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.