சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / 99 பேர் பாதிப்பு!

99 பேர் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று காலை இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 இலிருந்து 99 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் எனவும், 97 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை!

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ...