சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / போதகருடன் பழகிய சண்டிலிப்பாய் சமுர்த்தி உத்தியோகத்தர் – அவர் நிவாரணம் வழங்கிய 214 பயனாளிகள் தனிமைப்படுத்தல் !

போதகருடன் பழகிய சண்டிலிப்பாய் சமுர்த்தி உத்தியோகத்தர் – அவர் நிவாரணம் வழங்கிய 214 பயனாளிகள் தனிமைப்படுத்தல் !

சுவிஸ் போதகருடன் சம்மந்தப்பட்ட ,ஆராதனையில் கலந்து கொண்டிருந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை வழங்கியுள்ளதால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அந்த சமூர்த்திக் கொடுப்பனவை பெற்றவர்கள் என அத்தனை பேரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் .

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த மத போதகர் ஒருவரினால் தா வடிப்பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான குடும்பஸ்தர் வசிக்கும் தாவடி கிராமம் பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த ஆராதனையில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கலந்து கொண்டிருக்கிறார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அவர் ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர்.

அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர் கொடுப்பனவு வழங்கியுள்ளார்.

எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மதுபான வகைகளை கடத்தியவர்கள் கைது

பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது ...