பாகிஸ்தானில் பலரை காப்பாற்றிய இளம் மருத்துவர் கொரோனா தாக்கி உயிரிழப்பு

30 d
30 d

பாகிஸ்தானிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து பலரையும் காப்பாற்ற காரணமாக இருந்த இளம் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 881 பேருக்கு பரவி உள்ளது.

அங்குள்ள சிந்து மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அங்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 394 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் அங்கு 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை ஒரு மருத்துவர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மருத்துவர் உஷாமா ரியாஸ், பாகிஸ்தானின் கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பரிசோதித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பலரையும் சாவில் இருந்து காப்பாற்றினார். இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு மருத்துவரே பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மருத்துவர்கள் உயிரிழக்காமல் தடுக்க போதிய n 95 மாக்ஸ்குகள் மற்றும் தடுப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் உருக்கமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.