சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்!

இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்!

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான தனது விமான சேவை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு, இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 பாதிப்பை குறைதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதி எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.-651 நேற்று இரவு 9.55 மணியளவில் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டது.

இதேவேளை பல விமான நிறுவனங்களும் இலங்கைக்கான தங்கள் விமான சேவை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

இருப்பினும் லண்டனுக்கான யுஎல் -503 இலங்கை எயார்லைன்ஸ் விமானம் இன்று பிற்பகல் 12:50 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட உள்ளது என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கொரோனா தடுப்பு முகாமில் 1875 விமான பயணிகள் !

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோன வைரஸ் (கொவிட் 19) இலங்கையினுள் பரவுவதை தடுக்கும் பொருட்டு ...