சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / சந்தைகளில் சன நெரிசலை குறைப்பது தொடர்பில் ஆராய்வு

சந்தைகளில் சன நெரிசலை குறைப்பது தொடர்பில் ஆராய்வு

கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் பி.ப 4 மணியளவில் இன்று கூடியது.

தற்போது உலகத்தையே பாரிய அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் காரணமாக நாடு பூராகவும் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில்  சந்தைகளில் எவ்வாறு சன நெரிசலில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் சன நெரிசலை குறைப்பது தொடர்பாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் கிராமங்களில் நிகழும் மரணச் சடங்குகள் நிறைவுற்ற பின்னர் அவ்விடம் சென்று தொற்று நீக்கி விசுறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

மற்றும் குடிநீர் தேவைகளை மக்களுக்கு நிறைவேற்றுவது தொடர்பிலும் இன்று ஆராயப்பட்டது.

விசேட செயலணியில் கலந்து கொண்டவர்களுக்கான இருக்கைகளும் மூன்று அடிக்கு ஒன்று என்னும் விதத்தில் ஒதுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.அதற்கமைய, இதுவரை 34 பேர் ...