சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / ஊடகவியலாளர்களால் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஊடகவியலாளர்களால் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழில் இடம்பெற்ற மதபோதகரின் போதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியா, புளியங்குளம் வடக்கு, முத்துமாரிநகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேருக்கு வவுனியா ஊடகவியலாளர்களால் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமது நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட குறித்த குடும்பங்களுக்கு உணவினைப் பெற்றுக் கொடுக்குமாறு சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் விருட்சம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் உதவியுடன் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட வவுனியா ஊடகவியளாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிடம் சென்று நேரடியாக அவ் உணவுப் பொதிகளை கையளித்தனர்.

குறித்த மக்களிடம் சென்று கையளிக்க பலரும் அச்சம் தெரிவித்த நிலையில் சுகாதார திணைக்களத்தின் பாதுகாப்பு அறிவுரைகளின் படி ஊடகவியலாளர்கள் நேரடியாகச் சென்று அதனை அம் மக்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மதுபான வகைகளை கடத்தியவர்கள் கைது

பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது ...