கொரோனாவுக்கு தடுப்பூசி; அடுத்த ஆறு வாரங்களில் 45 பேரில் பரிசோதனை

4 gg
4 gg

கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி மனித சோதனைக்கு முதன்முதலில் உட்செலுத்தப்பட்டதாக அமெரிக்க தொற்று நோய்கள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அடுத்த ஆறு வாரங்களில் 45 பேர் பரிசோதிக்கப்படுவார்கள் என்றும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது முதல் சுற்று சோதனை நடவடிக்கையாகும். கொரோனா வைரஸுக்கு இந்டதத் தடுப்பு மருந்து ஏற்றதா, அது மனித உடலுக்கு ஏற்றதா என்பதை இந்த சோதனைமூலம் கண்டறியமுடியும். முன்னேற்றம் காணப்பட்டால் சோதனை விரிவுபடுத்தப்படும் என அமெரிக்க தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்த மேலும் சோதனைகள் தேவை, அதற்கு மேலும் பல மாதங்கள் தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.