கொரோனாவில் இருந்து பாதுகாக்க எது தரமான முக கவசம் ?

4df0
4df0

N 95 முக கவசம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் தரத்திற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான முக கவசம் ஆகும்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் இரசாயனத் தயாரிப்பில் ஈடுபடுவதால் இந்த N 95 முக கவசம் தூய்மையான காற்றைச் சுவாசிக்க உதவுகிறது.

மேலும் தூசி, சிறிய துகள்களை சுவாசிப்பதைத் தடுக்க அவை பயன்படுத்தப் படுகின்றன.

இப்படியான இந்த முக கவசத்தை பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

ஆனால் N 95 என்பது அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தின் தயாரிப்பில் வருகிறது, இந்த முக கவசத்தை 8 மணி நேரம் பயன்படுத்தலாம். எனவே N 95 முக கவசம் பயன்படுத்துவதால் நாம் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுவான அறிவுரை என்னவென்றால், இவ்வாறான முக கவசம் துணியில் செய்யப்படுவதால் அதனைச் சரியாக அணியாவிட்டால் அவை முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்காது என்கின்றனர். ‘N 95’ முத்திரை கொண்ட முக கவசம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, 95 சதவீதம் நாம் சுவாசிக்கும் சுத்தமில்லா காற்றை தடுக்கிறது. மேலும் மக்கள் முக கவசங்களை சரியாகப் பயன்படுத்துவதில்லை, அறியாமையில் அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் கூறுகின்றனர்.