‘கொரோனா’வின் ஆபத்து உச்சம்; ஊரடங்கைத் தளர்த்தவேண்டாம்!

5 g
5 g

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடைக்கிடையே தளர்த்துவதைத் தவிர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனாவின் ஆபத்து அதிகரிப்பதால் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒழிப்பு தொடர்பில் சமூக இடைவௌி கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.

“தற்போதைய நிலைமையில் வீடுகளுக்குள் மக்கள் இருப்பதே நூறு வீதம் நல்லது. அப்போதுதான் கொரோனா வைரஸை இந்த நாட்டிலிருந்து விரட்டலாம். மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றடைவதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நூறு வீதம் உறுதிப்படுத்த வேண்டும்” எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.