ஊரடங்கை மீறிய 8,739 பேர் கைது!

download 1
download 1

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 8 ஆயிரத்து 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,

“ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஊரடங்குச் சட்ட விதிமுறைகளை மீறிய 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8 ஆயிரத்து 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 2 ஆயிரத்து 149 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது” – என்றுள்ளது .