கிளிநொச்சியில் கிளினிக் நோயாளர்களுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் விநியோகம்

2 o
2 o

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை தொடர்ந்து பொது மக்கள் பொது மக்கள் ஓரிடத்தில் அதிகளவு ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த கிளினிக் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதனை தவிர்க்கும் வகையில் அவர்களது வீடு தேடிச் சென்று மருந்துகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் நீரிழிவு. உளநல சிகிச்சை, இருதய நோய், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மாதாந்த சிகிச்சை பெறும் பொது மக்கள் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை பதிவு செய்துகொண்ட பின்னர் அவர்களது வீடுகளுக்கு மருந்துகள் கொண்டு சென்று வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் 0212283037 என்ற இலக்கத்துடனும், மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் 021 228 5933, இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முழுப்பெயர், தபால் முகவரி, வயது, பால்
கலந்துகொள்ளும் கிளினிக்
,கிளினிக் இலக்கம் (கிளினிக்கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்), தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது