ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!

download 6 1
download 6 1

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான விளைவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஒருவேளை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தால், ஈரான் அதற்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கில் கடந்த மாதம் அமெரிக்க இராணுவமும், ஈரான் ஆதரவு தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டனர். இம்மாதம் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு மறுநாள் ஹிஸ்புல்லா முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாத முகாம் மீது அமெரிக்க இராணுவமும் தாக்குதல் நடத்தியிருந்தது.

இதேவேளை, கடந்த தை மாத ஆரம்பத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலைமனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானால் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் இலக்குவைக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.