அமெரிக்கப் பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசி

1 2
1 2

உலக மக்களை பெரும் பீதிக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை முறியடிக்கும் விதமாக தடுப்பூசி ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்காவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழக வைத்திய நிபுணர் குழு ஈடுபட்டுள்ளது.

தடுப்பூசியை தயாரிப்பதற்கான ஆரம்பமாக இது அமைவதாக தெரிவிக்கப்படுவதுடன் முதற்கட்ட சோதனை நடவடிக்கைகளின்போது எலிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றை முறியடிக்கும் தடுப்பு மருந்துகளை உருவாக்க முடியுமென குறித்த நிபுணர் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.