தபால்மூல வாக்குச் சீட்டுக்களை பகிர்ந்தளிக்கும் பணிகள் தொடங்கின!

Postal votes
Postal votes

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுக்களை பகிர்தளிக்கும் பணிகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் மாவட்ட ரிதியில் இடம்பெறுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6 இலட்சத்து 59 ஆயிரத்து 514 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி ஆகிய தினங்களில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.