வன்னியில் 150 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன!

Army
Army

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளே இவ்வாறு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவ தளபதி இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா குறித்த காணிகளை உத்தியோகபூர்வமானக அரச அதிகாரிகளிடம் கையளித்தார்.

இந்நிலையில், காணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோர் ஒப்பமிட்டு காணிகளை உத்தியோகபூவமாகப் பொறுப்பேற்றனர்.

கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை இராணுவ தளபதியினால் குறித்த காணிகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.