தன் மீதான விமர்சனம் குறித்து ஹக்கீம் கருத்து

Rauff hakeem
Rauff hakeem

எதிர்க்­கட்­சி­யினர் தங்­க­ளது இய­லா­மையைக் காட்­டு­வ­தற்­காக என்­னையும் சஹ்­ரா­னையும் இணைத்து விமர்­ச­னங்­களை பரப்­பி­வ­ரு­கின்­றனர். அப்­பாவி நாட்­டுப்­புற சிங்­கள மக்­களின் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு வேறு வழி தெரி­ய­வில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பணி­மனை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி­யினால் நேற்று முன்­தினம் இரவு மாளி­கா­வத்­தையில் திறந்­து­வைக்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார் அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது;

கொழும்பு நகரில் மாளி­கா­வத்­தை­யா­னது ஏழை மக்கள் செறிந்­து­வாழும் பிர­தே­ச­மாகும். ராஜ­பக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற அட்­டூ­ழி­யங்­களை இல­குவில் பட்­டி­ய­லிட முடி­யாது. பாதாள உலகக் கும்­பலை ஒழிப்­ப­தாகக் கூறி, சட்­டத்தை கையில் எடுத்­துக்­கொண்டு ஏரா­ள­மான உயிர்­களை காவு­கொண்ட வர­லா­றுகள் ஏரா­ள­மாக உள்­ளன. எவ்­வி­த­மான விசா­ர­ணை­களும் தட­யங்­களும் இல்­லாமல் பல உயிர்கள் வேட்­டை­யா­டப்­பட்­டன.

பாதாள உலகக் கும்­பலை ஒழிப்­பதை நாங்கள் தவ­றென்று கூற­வில்லை. அதனை சட்­டத்தின் பிர­காரம், நீதி நியா­யத்­தோடு மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். எவ்­வித கணக்கு வழக்­கு­மின்றி உயிர்­களை கொன்று புதைப்­பது முறை­யல்ல. எங்­க­ளது ஆட்­சி­யிலும் பாதாள உலகக் கும்­பலை ஒழிப்­ப­தற்கு பல நட­வ­டிக்கைள் சட்­ட­ரீ­தியில் மேற்­கொள்­ளப்­பட்­டன. ராஜ­பக் ஷ ஆட்சி போன்று எங்­க­ளது ஆட்­சியில் எந்த முறை­கே­டான சம்­ப­வங்­களும் இடம்­பெ­ற­வில்லை. ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றது போல, ஆட்­களை கடத்­திச்­சென்று காணா­ம­லாக்கி மறுநாள் கொன்­று­விட்டு காட்­டுக்குள் புதைக்­கின்ற சம்­ப­வங்கள் எங்­க­ளது ஆட்­சியில் நடை­பெ­ற­வில்லை.

இதுவே எங்­க­ளது அர­சாங்­கத்­துக்கும் முன்­னைய அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லுள்ள வித்­தி­யா­ச­மாகும். சமூ­கத்­தி­லி­ருக்கும் தீயதை ஒழிப்­ப­தற்கு ஒரு நியா­ய­மான முறை இருக்­கி­றது. அதை அர­சாங்கம் பின்­பற்ற வேண்டும். ஆட்­சியை பின்­க­தவால் பறிப்­ப­தற்கு எதிர்க்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் மேற்­கொண்ட அட்­ட­காசம் போன்­ற­தொரு விட­யத்தை எனது 25 வருட பாரா­ளு­மன்ற வாழ்க்­கையில் கண்­ட­தில்லை. எதிர்க்­கட்­சியில் இருக்­கும்­போதே இவ்­வ­ளவு அட்­ட­காசம் புரிந்­த­வர்கள் ஆளும் கட்­சியில் இருந்தால் நிலைமை இன்னும் தலை­கீ­ழாக மாறும். இத்­த­கை­ய­வர்­க­ளிடம் ஆட்­சியைக் கொடுத்தால், நாம் இதை­விட பல மடங்கு விளை­வு­களை சந்­திக்க நேரிடும் என்­பதை சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும்.

சிலர் பீதி­யால் சர­ணா­கதி அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்­றனர். எமது சமூ­கத்தை மூட்டை மூட்­டை­யாக விற்­கின்ற வேலையை தற்­போ­தைய மேல் மாகாண ஆளுநர் செய்­து­கொண்­டி­ருக்­கிறார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இருந்த மூத்த தலைவர் ஏ.எச்.எம். பௌசி எங்­க­ளுடன் இணைந்த பின் முஸ்லிம் தலை­வர்­க­ளா­கிய நாங்கள் அவரை தலை­வ­ராகக் கொண்டு செயற்­ப­டு­கிறோம். அவர் எதி­ரணிக் கூட்­டத்தின் உண்மைத் தன்­மையை நன்­க­றிந்­தவர். ஏனை­ய­வர்கள் வெறு­மனே வியா­பார நோக்­கிலே செயற்­ப­டு­கின்­றனர். சமூ­கத்தை விற்று பிழைப்பு நடாத்­து­ப­வர்கள் மத்­தியில் பௌசி அவ்­வா­றா­ன­வ­ரல்ல. இவர் எம்­முடன் வந்து இணைந்­து­கொண்­டதால் எதி­ர­ணி­யினர் மேலும் பலத்தை இழந்­து­விட்­டனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க் ஷவை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்கு மக்கள் மும்­மு­ர­மாக செயற்­பட்டு வாக்­க­ளித்­தார்கள். கல்­முனை, மூதூர் பிர­தே­சங்­களில் அதி­கூ­டிய வாக்­க­ளிப்பு வீதம் பதி­வா­கி­யது. அதை­விட கூடு­த­லான வேகத்­துடன் இந்த தேர்­த­லிலும் மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும். அதன்­மூலம் ராஜ­பக்3ஷ குடும்­பத்தை மீண்டும் வீட்­டுக்கு அனுப்­ப­வேண்டும்.

கடந்த ஆட்­சி­யா­ளா­ளர்கள் கடன் சுமை­யினால் பயந்து போனார்கள். மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தாரத் தடைக்கு அஞ்­சி­னார்கள். மனித உரி­மைகள் ஆணை­யகம் முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­களை மூடி­ம­றைத்து, தனக்கு ஆத­ர­வி­ருப்­பதைக் காட்டும் நோக்கில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தேர்­தலை நடத்­தி­னார்கள். தப்­பிப்­பதற்­காக தேர்­தலை முன்­னெ­டுத்து குப்­புற விழுந்­தவர் இன்னும் எழுந்­தி­ருக்­க­வில்லை.

எதிர்­கட்­சி­யினர் தங்­க­ளது இய­லா­மையைக் காட்­டு­வ­தற்­காக என்­னையும் சஹ்­ரா­னையும் இணைத்து விமர்­ச­னங்­களை பரப்­பி­வ­ரு­கின்­றனர். அன்று காத்­தான்­கு­டியில் ஹிஸ்­புல்­லாஹ்­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை பார்­வை­யி­டு­வ­தற்கு வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றி­ருந்தேன்.

காத்­தான்­கு­டிக்குச் சென்ற என்­னுடன் பொலி­ஸாரும் சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளரும் வரு­கை­தந்­தி­ருந்­தனர். அவர் இப்­போது மொட்டு கட்­சியின் அமைப்­பா­ள­ராக இருக்­கிறார். சஹ்­ரானோ அவ­ரது சகோ­த­ரனோ தீவி­ர­வாதி என்று 2015இல் எனக்கோ அல்­லது என்­னுடன் வந்­த­வர்­க­ளுக்கோ தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

எனது நற்­பெ­ய­ருக்குக் களங்கம் விளை­வித்து, மக்கள் மத்­தியில் வாக்­கு­களை சித­ற­டிப்­ப­தற்­காக எதி­ரணி செய்த லீலைதான் இந்த விசமப் பிர­சாரம். இதனால் அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்களை உசுப்பேற்றி வாக்குச் சேகரிக்கவே இப்படியான காரியங்களைச் செய்கின்றார்கள். வாக்குகளை அதிகரிப்பதற்கு அவர்களிடம் வேறு யுக்திகள் இல்லை என்பது தெரிந்துவிட்டது. சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஒருபோதும் அவர்களுக்குக் கிடைக்காது.

ஆகவே, இவ்வாறான களங்கத்தை ஏற்படுத்தி, பெரும்பான்மை மக்கள் மத்தியில் எனக்குள்ள நற்பெயருக்கு பங்கம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதனை மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். இந்த ராஜபக் ஷ கும்பலை விரட்டியடிப்பதற்கு சஜித் பிரேமதாசவை அதிகப்படியான வாக்குகளால் நாம் வெற்றிபெறச் செய்வோம்.