சஜித்தின் வெற்றிக்கு அனைத்து கட்சிகளும் இணைவு

herisan
herisan

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்வதற்கு பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்பாக்கும் அனைத்து தகுதிகளும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளதாகவும் அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே எனவும் அது தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.