வெட்டுப்புள்ளியின் நீக்கத்தினால் இலவசக் கல்விக்கு ஆபத்து- ரணில் எச்சரிக்கை

ranil 7
ranil 7

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கு நடைமுறையில் உள்ள வெட்டுப்புள்ளி முறையை (Z Score) ஒழிப்பதாக கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு பொது நூலகத்தில் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த வேளையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கு நடைமுறையில் உள்ள வெட்டுப்புள்ளி முறையை ஒழிப்பதனால் நடைமுறையிலுள்ள இலவசக் கல்வி முறைமை இல்லாதொழிக்கப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச பல்கலைக்கழகத் தெரிவுக்கான இசட் வெட்டுப்புள்ளி வழங்கல் முறையை இரத்துச் செய்வதாகவும், அதற்குப் பதிலாக பாடசாலை மட்டத்தில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்யக் கூடிய விஞ்ஞானமுறை ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் கூறுகின்றார்.

அவர் கூறுவதை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்? வெட்டுப்புள்ளி முறையை நீக்குவதால் இலவசக் கல்வி முற்றாக அழிந்துபோகும் நிலையே ஏற்படும்.

இலவசக் கல்வியையும் இல்லாமல் செய்யத் திட்டமிடுகின்றார்கள். எனவேதான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடித்து, சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் – என்றார்.