ஐ.எஸ் தலைவன் பக்தாதியின் சகோதரி கைது

al baghdadi
al baghdadi

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டிருந்த நிலையில் அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் மற்றும் ஐ.எஸ் அமைப்பு என்பன உறுதி செய்திருந்தன.

இந்நிலையில், பக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது 65) மற்றும் அவரது குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்திருப்பதாக துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.