மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

New Zealand
New Zealand

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட தொடரின் 3வது போட்டியில் நியூசிலாந்து அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து சார்பாக கொலின் டி கிரான்ட்ஹொம் 55 ஓட்டங்களையும் மார்டின் குப்டில் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து சார்பாக மாலன் 55 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கொலின் டி கிரான்ட்ஹொம் தெரிவுசெய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.