31வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி

virat kholi
virat kholi

உலகின் தலைசிறந்த துடுப்பெடுத்தாட்ட வீரரும் இந்திய அணியின் தலைவருமான விராட் கோலி இன்று தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேபாளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 21 ஆயிரத்து 36 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

82 டெஸ்ட் போட்டிகளில் 7,066 ஓட்டங்களையும் (26 சதம், 22 அரை சதம்), 239 ஒரு நாள் போட்டியிகளில் 11,520 ஓட்டங்களையும் (43 சதம், 54 அரை சதம்) 72 T20போட்டிகளில் 2,450 ஓட்டங்களையும் இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.